குருநாகல் பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர் தற்கொலை

Report Print Manju in சமூகம்

குருநாகல் பேருந்து நிலையத்தில் இன்று காலை பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்து நிலையத்தில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து குறித்த பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குருநாகல், தோரயாய பகுதியை சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குருநாகல் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.