முல்லைத்தீவில் 86 குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கி வைப்பு

Report Print Theesan in சமூகம்

மட்டுவில் - தெற்கு வளர்மதி சனசமூக வெளிநாட்டு வாழ் உறவுகளால் வெள்ள அனர்த்த பேரழிவுகளிற்கு வழங்கப்பட்ட நிதியானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்நாட்டு வெளிநாட்டு உறவுகள் சார்பாக வளர்மதி சனசமூக நிலையத்தினரால் மூன்றாவது கட்டமாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வானது இன்று காலை புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் ம .பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த 86 குடும்பத்தினருக்கும் ரூபா 5,000 படி நிதியுதவி (430000) வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் முல்லை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் லிங்கேஸ்வரன் பிரதம விருந்தினராகவும் மற்றும் உதவி திட்ட பணிப்பாளர், கணக்காளர், நிர்வாக அதிகாரி, வளர்மதி நிர்வாக குழுவினர், சனசமூக நிலையத்தின் உப அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

மூன்றாம் கட்டத்திற்கான திட்ட முன்மொழிவை ஏற்று, வெளிநாட்டு உறவுகள் மிக வேகமாக தமது உதவிகளை செய்தமையாலேயே இந்நிகழ்வையும் எம்மால் வேகமாக முன்னெடுக்க முடிந்தது என குறித்த நிதியத்தினர் தெரிவித்திருந்தனர்.

முதலாம் கடடமாக 120,000 பெறுமதியான உலருணவுகள் பாரதிபுரம் மக்களுக்கும், இரண்டாம் கட்டமாக 110,000 பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் தேவிபுரம், கைவேலி மாணவர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.