முள்ளிவாய்க்கால் சென்று உதவி செய்த பௌத்த தேரர்

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மினுவன்கொடவ தம்மதிட்ட தேரர் பாடசாலை கற்றல் உபகரணங்களை இன்று வழங்கிவைத்தார்.

இன்று காலை முள்ளிவாய்க்கால் மற்றும் சுதந்திரபுரம் பகுதிக்கு சென்ற மினுவன்கொடவ தம்மதிட்ட தேரர் குறித்த பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்

இதன்போது குறித்த பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார்.

கடந்த டிசம்பர் மாதம் இறுதிப்பகுதியில் முல்லைத்தீவில் ஏற்பட்ட திடீர் வெள்ள அனர்த்தம் காரணமாக 9574 குடும்பங்களை சேர்ந்த 30499 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை மினுவன்கொடவ தம்மதிட்ட தேரர் உள்ளிட்ட பௌத்த மதகுருமார் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.