வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உருத்திரபுரம் மக்களுக்கு உதவி!

Report Print Uruthiran in சமூகம்

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட உருத்திரபுரம் மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த உதவிப் பொருட்களடங்கிய பொதிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருத்திரபுரம் வட்டார அமைப்பாளர் பா.எழில்வேந்தன், பெரியபரந்தன் வட்டார அமைப்பாளர் சு.ஜதீஸ்வரன் உள்ளிட்ட நிவாரணப் பணிக்குழுவினர் நேரடியாகச் சென்று மக்களிடம் வழங்கி வைத்திருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் ஒழுங்மைப்பில் இலண்டனைச் சேர்ந்த சிறீஸ்கந்தராஜா காந்தா குடும்பத்தினரின் நிதிப் பங்களிப்பின் மூலம் கிளிநொச்சியில் வெள்ளப்பெருக்கு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட உருத்திரபுரம் மக்களுக்கான உலருணவுப் பொருட்களடங்கிய பொதி, உணவல்லாத அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொதி என்பன வழங்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களது ஒழுங்கமைப்புக்கமைவாக புலம்பெயர் தேசத்துத் தாயக உறவுகளால், வெள்ளப் பெருக்கு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.