வவுனியாவில் திருடனை பிடிக்கச் சென்ற பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியாவில் கடனட்டை மோசடியில் ஈடுபட்ட திருடனை அடையாளம் காண, கண்காணிப்பு கமராக்களை பரிசோதனை செய்த பொலிஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

'பூட்சிற்றி' மற்றும் 'சதோச' விற்பனை நிலையங்களிலுள்ள கண்காணிப்பு கமராக்களை ஆய்வு செய்த பொலிசார், பல மாதங்களாக குறித்த நிலையங்களில் கண்காணிப்பு கமராக்கள் இயங்காத நிலையில் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

வவுனியா கூமாங்குளம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரின் கடனட்டை திருடப்பட்ட நிலையில், அது குறித்து வங்கிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடனட்டையின் பணப்பரிமாற்றத்தை வங்கி நிறுத்தியதுடன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளார்.

திருட்டு போன கடனட்டையை பயன்படுத்தி வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள 'பூட்சிற்றி' மற்றும் நெளுக்குளம் சந்தியில் அமைந்துள்ள 'சதோச' விற்பனை நிலையங்களில் சுமார் 8000 ரூபாவிற்கு பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

வங்கியினால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் குறித்த விற்பனை நிலையங்களில் கண்காணிப்பு கமராக்களை பொலிசார் ஆய்வு செய்த போது வவுனியா 'பூட்சிற்றியில்' கமராக்கள் பொருத்தப்பட்ட நிலையில் அவை இயங்கவில்லை என்றும், நெளுக்குளம் 'சதோச' விற்பனை நிலையத்தில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படவே இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

விற்பனை நிலையங்களின் பொறுப்பற்ற தன்மை காரணமாக கடனட்டை திருடனை பிடிக்க முடியாத நிலைமை காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட இளைஞர், மிகவும் சிரமத்தின் மத்தியில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், ஒரு நாளைக்கு பல நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் விற்பனை நிலையத்தில் கண்காணிப்பு கமராக்கள் இயங்காமல் இருப்பதும், கமராக்கள் பொருத்தப்படமால் இருப்பதும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு குறித்து குறித்த நிறுவனங்கள் அசமந்தமாக இருப்பதையே எடுத்துக்காட்டுகிறது.

அத்துடன் குறித்த திருடன் இங்கு கமராக்கள் இயங்காமல் இருப்பதை அறிந்தே எனது கடனட்டையை பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்துள்ளான். இவ்வாறான நிலைமை எதிர்காலத்தில் ஏற்படக்கூடாது எனின் குறித்த விற்பனை நிலையங்கள் கண்காணிப்பு கமராக்களை சீராக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.