வவுனியாவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் இராசபுரம் கனகராயன்குளம் பகுதியில் நேற்று கட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று பொலிஸாரின் சோதனை நடவடிக்கையில் இரவு 11.30 மணியளவில் சட்டவிரோதமாக பதிவுகளின்றி கட்டுதுப்பாக்கி வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராசபுரம் கனகராயன்குளத்திலுள்ள வீட்டிற்கு சென்ற பொலிசார் வீட்டினை சோதனை செய்த போது பதிவுகள் ஏதுமின்றி சட்டவிரோதமாக கட்டுத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததன் பேரில் தர்மதாசன் செல்வநாயகம் (வயது-48) என்பவரையே கட்டுதுப்பாக்கியுடன் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.