திருமணமாகி சில மாதங்களில் பரிதாபமாக உயிரிழந்த யாழ். இளைஞர்கள் - நேற்று நடந்த கோரச் சம்பவம்

Report Print Vethu Vethu in சமூகம்

கிளிநொச்சில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த இளைஞர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

இயக்கச்சியில் இராணுவ வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து ஏற்பட்டிருந்தது. இதன் போது முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலியாகி இருந்தனர்.

பளையைச் சேர்ந்த 36 வயதான பி.ஜெயக்குமார், பளை, மாசாரைச் சேர்ந்த 32 வயதான கே.குகதாஸ், சுழிபுரத்தைச் சேர்ந்த எஸ்.ரதீஸ்வரன் ஆகியோரே உயிரிழந்தனர்.

இவர்களில் குகதாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமண பந்தத்தில் இணைந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

இந்த கோர விபத்து நேற்று மாலை நடந்துள்ளதுடன், இராணுவ வாகனத்தை செலுத்தி வந்தவர் பளைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பளையில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியை, கட்டைக்காடு இராணுவ முகாமில் இருந்து இயக்கச்சி 552 படைப்பிரிவு முகாமுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்ள வந்த இராணுவ ட்ரக் வண்டி முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியது என்று தெரியவருகின்றது.

விபத்தில் சிக்கிய முச்சக்கர வண்டி முற்றாக நசுங்கிச் சேதமடைந்தது. முச்சக்கரவண்டியைச் செலுத்தியவர் மிக மோசமான காயங்களுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். ஏனையவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

எனினும் இந்த கோர விபத்து தொடர்பான தடங்களை அழிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாக பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.