மன்னாரில் வீடொன்றிற்குள் சிக்கிய இராட்சத முதலை! அதிர்ச்சியில் மக்கள்

Report Print Ashik in சமூகம்

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தரவன்கோட்டை கிராமத்தில் உள்ள வீடு ஒன்றின் வளாகத்தினுள் சென்ற முதலை ஒன்றை குறித்த வீட்டின் உரிமையாளர்கள் பிடித்து கட்டி வைத்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

மேலும், குறித்த முதலை சுமார் 7 அடி நீளம் கொண்டது என தெரிய வருகின்றது.

குறித்த வீட்டை சுற்றி குளம் மற்றும் நீர்த்தேக்கம் எவையும் இல்லாத நிலையில், முதலை காட்டில் இருந்து ஆடு, நாய் மற்றும் கோழி போன்றவற்றை வேட்டையாடும் நோக்கில் காட்டில் இருந்து கிராமத்திற்குள் வந்திருக்கலாம் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த முதலை தொடர்பில் கிராம அலுவலகர் மற்றும் மன்னார் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.