கினிகத்தேன பகுதியில் ஏற்பட்ட விபத்து காரணமாக போக்குவரத்து முற்றாக பாதிப்பு

Report Print Thirumal Thirumal in சமூகம்

கினிகத்தேன - களுகல, லக்ஷபான பிரதான வீதியில் கனரக வாகனமொன்று குடைசாய்ந்துள்ளதால் வீதியின் போக்குவரத்து முற்றாக தடைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சாரதிகள் மற்றும் பொது மக்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் கினிகத்தேன பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து,பொல்பிட்டிய புரோட்லேன்ட் நீர்மின் உற்பத்தி நிலையத்திற்கு பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வீதியில் வளைவு பகுதியில் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமையினாலே விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபத்தின் போது எவ்வித பாதிப்புக்களும்,உயிர் சேதங்களும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.