யாழில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பயங்கர கொள்ளை! அதிகாலையில் நடந்த விபரீதம்

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

யாழ். சாவகச்சேரி நகரில் வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளையிடப்பட்டுள்ளது.

இக்கொள்ளைச் சம்பவம் இன்று அதிகாலை 2 மணிக்கும் 3 மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட வர்த்தக நிலையத்தின் மேற்கூரையை பிரித்து சி.சி.ரீ.வி கமரா இணைப்புக்களை துண்டித்து விட்டு உள்நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பணம் மற்றும் தொலைப்பேசி மீள்நிரப்பு அட்டைகளையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இதன்போது சுமார் ஏழு இலட்சம் ரூபா பணம் மற்றும் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான தொலைப்பேசி மீள்நிரப்பு அட்டைகள் என சுமார் 10 இலட்சம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இக்கொள்ளை சம்பவம் இடம்பெற்ற போது கடையின் பின்புறம் வர்த்தக நிலையத்தின் பணியாளர்கள் உறக்கத்தில் இருந்துள்ளனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸாரோடு இணைந்து சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.