சாதனை படைத்துள்ள ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலய பாடசாலை

Report Print Navoj in சமூகம்

இம்முறை வெளியான க.பொ.த. உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு, ரிதிதென்னயில் உள்ள இக்ரஹ் வித்தியாலய பாடசாலை அப் பிரதேசத்தில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளது.

கடந்த வருடம் க.பொ.த. உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய அப்பாடசாலையின் அனைத்து மாணவர்களும் சித்தியடைந்து 100 வீதம் சித்தியை அப்பாடசாலை பெற்றுள்ளதுடன், மூவர் பல்கலைக்கழக அனுமதியை பெற்று வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

பாத்திமா சபானா, பாத்திமா ரிபாஸா, பாத்திமா சஸ்னா, பாத்திமா அகீலா, முகம்மது ரியாஸ், முகம்மது ரிபாஸ் ஆகியோர் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களாகும்.

இவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களான இஸ்லாம் பாட ஆசிரியர் பஸால் முகம்மது, தமிழ்பாட ஆசிரியர் எம்.ஐ. ஷாஜஹான், புவியியல் பாட ஆசிரியர் எம்.பி.எஸ்.ஹாஜரா ஆகியோருக்கு இச்சந்தர்ப்பத்தில் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக வித்தியாலய அதிபர் என்.எம்.சஹாப்தீன் தெரிவித்துள்ளார்.

இப்பாடசாலை மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படும் பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது.