தேசிய ரீதியில் உற்பத்தித்திறன் விருதுகளை பெற்ற வைத்தியசாலை

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

தேசிய ரீதியில் கல்முனை ஆதாரவைத்தியசாலை 'ஏ' தரத்தில் இரண்டாவது தடவையாக மூன்றாமிடத்தையும், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை 'பி' தரத்தில் மூன்றாவது முறையாக இரண்டாமிடத்தையும், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்திற்கு முதற் தடவையாக மூன்றாமிடத்தையும் பெற்று உற்பத்தி திறன் விருதுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளன.

குறித்த விருது நிகழ்வுகள் உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய உற்பத்தித் திறன் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள உற்பத்தித் திறன்மிக்க நிறுவனங்களின் அனைத்து மட்டங்களிலும் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதே இதன் முதன்மையான நோக்கமாக காணப்படுகின்றது.

இதனடிப்படையில் 2018ம் ஆண்டிற்கான உற்பத்தி திறன் விருதுக்கான வெற்றியாளர்கள் இணையத்தளம் வாயிலாக வெளியிடப்பட்டுள்ள நிலையில் தேசிய ரீதியில் கல்முனை ஆதார வைத்தியசாலை 'ஏ'தரத்தில் இரண்டாவது தடவையாக மூன்றாமிடத்தையும், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை மூன்றாவது தடவையாகவும், தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளதோடு முதற்தடவையாக போட்டியிட்ட களுவாஞ்சிகுடி பிரதேச செயலகம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.