ஹட்டனில் கற்பாறை வெடியால் அயல் குடியிருப்புகளுக்கு பாதிப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

ஹட்டன், குடாஓயா பகுதியில் காணியொன்றில் பாரிய கல்லொறை வெடிவைத்து அகற்ற முற்ப்பட்மையினால் அப்பகுதியிலுள்ள குடியிருப்புகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக குடியிருப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

மத்திய மாகாண சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதியை மீறிய வகையில் குறித்த கற்பாறையை அகற்றுவதாக பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் குற்றம் சுமத்துவதுடன் கடந்த காலத்தில் குறித்த காணியில் கல்குவாரி இருந்தது.

மேலும் அயலவர்களின் பாதிப்பு தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் குறித்த கல்குவாரி மூடப்பட்டதாகவும் தற்போது வேறு ஒருவர் குறித்த காணியை பெற்று கற்பாறையை உடைக்க முற்படுவதாக குடியிருப்பாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த காணி உரிமையாளர் தனது காணியிலுள்ள மண்மேட்டை அகற்ற முற்பட்ட போது பாரிய கற்பாறையொன்று இருந்துள்ள நிலையில் வெடிவைத்து பாறையை அகற்ற முற்பட்டபோதே அயல் குடியிருப்புகள் அதிர்வுக்குள்ளாகியதுடன் வெடி சத்தத்தினால் குடியிருப்பாளர்களும் அச்சத்திற்குள்ளானதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் குறித்த காணி உரிமையாளரிடம் பாதிப்புக்குள்ளான குடியிருப்பாளர்கள் முறையிட்டபோது தனக்கு காணி உரிமையாளர் அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் குறித்த காணி உரிமையாளர் தெரிவிக்கையில்,

குறித்த காணி 10 பேர்ச்சஸ் நிலப்பரப்பை கொண்டுள்ளதுடன் அண்மையில் தான் கொள்வனவு செய்து காணியை தளம் வெட்டும் போது பாரிய கற்பாறையொன்று நடுவில் காணப்பட்ட நிலையில் சூழல் பாதுகாப்பு அதிகாரிகளின் அனுமதியுடன் வெடி வைத்து அகற்ற முற்பட்டேன்.

எனினும் தற்போது அயல் குடியிருப்பாளர்களின் முறைப்பாட்டுக்கமைய வெடி வைப்பதை தவிர்த்து இரசாயனம் பயன்படுத்தி கற்பாறையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.