கொட்டகலை வனப்பகுதியில் தீ: 25 ஏக்கர் காடு எரிந்து நாசம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

நுவரெலியா - கொட்டகலை, ரொசிட்டா தேசிய பாற் பண்ணைக்கு சொந்தமான வனப்பகுதியில் தீ ஏற்பட்டுள்ளதுடன் 25 ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொட்டகலை, ரொக்கில் தோட்ட குடியிருப்பை அண்மித்த பகுதியிலுள்ள மாணா புல் வனப்பகுதியிலே இன்று பிற்பகல் தீ பரவியுள்ளது.

அதிக காற்றுடன் கூடிய வெப்ப காலநிலையினால் தீ பரவல் அதிகரித்துள்ள நிலையில் வனப்பகுதியை ஊடறுத்துச் செல்லும் மின் விநியோகமும் பாதிப்படைந்துள்ளது.

அதிக காற்றினால் ஏற்பட்டுள்ள தீச் சூவளையினால் தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலை காணப்படுவதாகவும் தொடர்ச்சியாக காடுகளுக்கு தீ வைக்கும் விசம செயலில் சிலர் ஈடுட்டு வருவதாகவும் திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.