மன்னார் கணேசபுரம் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பொருட்கள் வழங்கி வைப்பு

Report Print Ashik in சமூகம்

மன்னார், கணேசபுரம் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு இவ் வருடத்திற்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் தைத்த பாடசாலை சீருடைகள் ஆகியன வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந் நிகழ்வானது குறித்த பாடசாலையில் இன்று பாடசாலை அதிபர் கவிதா தலைமையில் புலம்பெயர் மக்களின் நிதி உதவியுடன் புளூஸ் அபிவிருத்தி அமைப்பினால் நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மாந்தை மேற்குப் பிரதேச உதவி செயலாளர் ஜெசிந்தன் கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் விஜயபாண்டி, மாந்தை மேற்கு சிறுவர் நன்நடத்தை உத்தியோகஸ்தர் அமல்ராஜ், புளூஸ் அபிவிருத்தி அமைப்பைச் சேர்ந்த ஜெயப்பிரதாபன் மற்றும் தென்றல்மாறன் என பலர் கலந்து கொண்டனர்.