இலங்கையின் கிரிக்கெட்டில் ஊழல்: இரண்டு வார மன்னிப்புக் காலம்

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கையின் கிரிக்கெட் வீர்ர்கள் மற்றும் ஏனையவர்கள் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் இரண்டு வாரகால மன்னிப்புக் காலத்தை அறிவித்துள்ளது.

இந்தக் காலத்துக்குள் ஊழல்கள் மற்றும் மோசடிகள் குறித்து முன்வந்து தகவல்களை வெளியிட வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் ஊழல் எதிர்ப்பு இணைப்பாளர் ஸ்டீவ் ரிச்சட்சன் இந்தக் கோரிக்கையை இன்று விடுத்துள்ளார்.

கொழும்பில் வைத்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஊழல்களுக்கு துணைபுரிந்தும் அது தொடர்பில் தகவல்களை வெளியிடாதோரிடமே இந்தக் கோரிக்கை விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு விடயங்களை வெளிக்கொண்டு வராவிட்டால், அது தொடர்பில் குற்றச்சாட்டுக்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர்களான நுவன் சொய்ஸா, தில்ஹார லொக்குஹெட்டிகே ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகள் கடந்த ஒன்றரை வருடகாலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஊழல் விசாரணைகளுக்கு முன்னாள் வீர்ர் சனத் ஜெயசூரிய ஒத்துழைக்கவில்லை என்றும் கிரிக்கெட் சம்மேளன அதிகாரி குற்றம் சுமத்தியுள்ளார்.