காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியாவில் போராட்டம்

Report Print Theesan in சமூகம்

தாயகத்தில் கையளிக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை 688 ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் இன்று மதியம் 12.00 மணிக்கு தேங்காய் உடைத்து வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து நடைபவனியாக வவுனியா கண்டிவீதியில் அமைந்துள்ள உண்ணாவிரதக் கொட்டகையை வந்தடைந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த, தாயகத்தில் கையளிக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தங்களுக்கு எதிராக சிலர் சங்கம் அமைத்து செயற்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டியதுடன் எதிர்வரும் பொங்கல் தினத்தன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.