ஆபாச விடுதிக்குள் சிக்கிய பிரபல நடிகை!

Report Print Vethu Vethu in சமூகம்

சீதுவ பிரதேசத்தில் நடத்தி செல்லப்பட்ட பிரபல மசாஜ் நிலையம் ஒன்றில் இடம்பெற்ற விசேட சுற்றி வளைப்பில் பிரபல தொலைகாட்சி நடிகை உட்பட 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெஹெலியகொட விசேட விசாரணை பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் சுற்றிவளைப்பை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் மசாஜ் நிலையத்தின் முகாமையாளர் அங்கிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மசாஜ் நிலையத்திடம் 20 கிளைகள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட நடிகை இந்த நாட்களில் பிரபல தொலைகாட்சி தொடர் ஒன்றில் நடித்து வருவதோடு பிரபலமான 5 படங்களில் நடித்துள்ளார் என கூறப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.