முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் வாழ்வாதர உதவிகள் வழங்கி வைப்பு!

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு மாவட்டச்செயலகத்தில் வாழ்வாதரம் வழங்கும் நிகழ்வில் பிரமவிருந்தினராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதிகேதிஸ்வரன் தலைமையில் இன்று காலை 11.00 மணியளவில் ஆரம்பமாகியது.

இதன்போது 50க்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த மாதம் ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பான பாதிப்புக்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன்

அமைச்சின் அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, அமைச்சின் அதிகாரிகள், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.