களுவாஞ்சிகுடியில் தாலிக்கொடி திருடர்களால் பறிப்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 6 பவுண் பெறுமதியான தாலிக்கொடி திருடர்களால் பறித்துச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று மாலை 5.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

களுவாஞ்சிகுடி 9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கௌரி லோகநாதன் என்பரின் தாலிக்கொடியே இவ்வாறு பறித்துச் செல்லப்பட்டுள்ளது.

பல்சர் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு சந்தேக நபர்களால் திருடப்பட்டுள்ளது.

குறித்த பெண் உணவுக்காக இடியப்பத்தை பெற்றுக்கொண்ட வாழியை ஒப்படைத்து விட்டு திரும்புகையிலேயே வயோதிப்பெண்ணை தள்ளிவிட்டு தாலிக்கொடியை திருடர்கள் அபகரித்துச் சென்றுள்ளார்கள்.

இவ்வாறு நடைபெற்ற திருட்டுச் சம்பவம் சீசீரிவி கமராமூலம் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

களுவாஞ்சிகுடியில் இதுவரையும் 7 திருட்டுச்சம்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற திருட்டுச்சம்பவத்தின் சூத்திரதாரிகளை கண்டு பிடிக்கவில்லை என்று பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

இத்திருட்டுச் சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிகுடி குற்றத்தடுப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.