கண்ணிவெடி அகற்றுனர்களின் மனிதநேயப்பணி!

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியில் மிதி வெடி அகற்றுனராக பணிபுரியும் ஒருவரின் வீட்டினை சார்ப் நிறுவனத்தின் கண்ணிவெடி அகற்றுனர்கள் இன்று புனரமைத்து கொடுத்துள்ளனர்.

அண்மையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தர்மபுரம் பகுதியில் வசிக்கும் சார்ப் நிறுவனத்தின் மிதி வெடி அகற்றுனர் ஒருவரின் வீடும் வெள்ளத்தினால் முழுமையாக பாதிக்கபட்டுள்ளது.

இந்நிலையில் இன்று கண்ணிவெடி அகற்றுனர்கள் மற்றும் உயர்நிலை அதிகாரிகள் ஒன்றினைந்து குறித்த தற்காலிக வீட்டினை மீள் புனரமைத்து கொடுத்துள்ளனர்.

இந்த புனரமைப்பணியின் போது குறித்த நிறுவனத்தின் திட்டம் முகாமையாளர் மற்றும் களத்திட்ட முகாமையாளர் உயர்நிலை அதிகாரிகள் கண்ணி வெடி அகற்றும் பணியாளர் என பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டது. இதன்போது பல வீடுகள் வாழ்வாதாரங்கள் என பல சொத்தழிவுகள் இடம் பெற்றமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

Latest Offers