பெறுமதியான அலைபேசியை திருடி வைத்திருந்த மூவருக்கு விளக்கமறியல்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - சம்பூர் பகுதியில் பெறுமதியான அலைபேசியை திருடி வைத்திருந்த மூவரை இம்மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் உத்தரவிட்டுள்ளார்.

ஈச்சிலம்பற்று, உப்பூரல், கல்லடி பகுதியைச் சேர்ந்த 27, 34, மற்றும் 28 வயதுடைய மூவரே இன்று இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் பெறுமதியான அலைபேசியொன்றினை திருடி மூவரும் இணைந்து விற்பதற்கு வைத்திருந்த வேளையிலே பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்து மூன்று சந்தேக நபர்களையும் பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

Latest Offers