முதன் முறையாக மலையக தமிழர் ஒருவர் உயர் நீதிமன்ற நீதியரசராக நியமனம்!

Report Print Murali Murali in சமூகம்

முதன் முறையாக மலையகத் தமிழர் ஒருவர் உயர் நீதிமன்ற நீதியரசராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

மூன்று உயர் நீதிமன்ற நீதியரசர்களும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஒருவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று முற்பகல் நீதியரசர்கள் மூவரும் பதவியேற்றனர்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சிதம்பரப்பிள்ளை துரைராஜா, உயர் நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வு பெற்றார். இதன் மூலம் மலையக தமிழர் ஒருவர் உயர் நீதிமன்ற நீதியரசராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மூவரும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஒருவரும் புதிதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் பிரித்தி பத்மன் சூரசேன, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சிதம்பரப்பிள்ளை துரைராஜா, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஈ.ஏ.ஜீ.ஆர்.அமரசேகர ஆகியோர் உயர் நீதிமன்ற நீதியரசர்களாக புதிதாக பதவியேற்றனர்.

இதேவேளை, மேல் நீதிமன்றத்தின் நீதிபதி கே.பி.பெர்ணான்டோ மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வு பெற்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.