அண்மையில் மீட்கப்பட்ட போதைப்பொருளுக்கும் பாதாள உலகக்குழு தலைவருக்கும் தொடர்பு

Report Print Kamel Kamel in சமூகம்

இலங்கையில் அண்மையில் மீட்கப்பட்ட போதைப்பொருட்களுக்கும் பிரபல பாதாள உலகக்குழுத் தலைவர் தாவூத் இப்ராஹிமிற்கும் இடையில் தொடர்பு உண்டு என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதம் தெஹிவளை பிரதேசத்தில் சுமார் 3.3 பில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டிருந்தது.

அத்துடன், அந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இரண்டு பங்களாதேஷ் பிரஜைகள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த போதைப்பொருள் மீட்புச் சம்பவத்துடன் மேலும் மூன்று பங்களாதேஷ் பெண்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தானிலிருந்து குறித்த போதைப்பொருள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.