தமிழர் படுகொலையின் 45ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் வைத்து உயிரிழந்த தமிழர்களை நினைவு கூறும் முகமாக 45ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

யாழ். பிரதான வீதியில் உள்ள நினைவு தூபி முன்பாக இன்று இந்த நினைவு நிகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1974ஆம் ஆண்டு உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் மின்கம்பிகள் அறுந்து விழுந்த நிலையில் 11 தமிழர்கள் உயிரிழந்திருந்தனர்.

இவர்களுடைய 45ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வே இன்று இடம்பெற்றுள்ளது.

இந்த நினைவேந்தலில் அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.