கால்நடைகள் இறப்பு பற்றி கவலை வெளியிட்டுள்ள பண்ணையாளர்கள்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - கந்தளாய் பிரதேசத்தில் கால்நடைகள் தொடர்ச்சியாக இறந்து வருகின்றமை பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில் கந்தளாய் சீனி தொழிற்சாலைகளில் காணப்படும் மாடுகளும் அதிகளவாக இறந்திருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பண்ணையாளர்கள் மேலும் கூறுகையில்,

குறித்த பகுதியில் கிட்டத்தட்ட 1500 இற்கும் அதிகமான மாடுகளை கால்நடை வளர்ப்பாளர்கள் வைத்து பராமரித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக கால்நடைகளின் அதிகரிப்பு காரணமாக மேய்ச்சல் நில பற்றாக்குறையால் சுமார் 200 இற்கும் மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளன.

தொடர்ந்தும் மாடுகளின் இறப்பு பதிவாகி வரும் நிலையில் இது தொடர்பாக எந்தவித நடவடிக்கைகளும் அரசாங்கத்தினால் எடுக்கப்படவில்லை.

அத்தோடு கந்தளாய் பிரதேச செயலகத்திலும், மிருக வைத்தியர்களிடமும் முறைப்பாடு செய்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

எனவே இது விடயமாக உரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.