கிளிநொச்சிக்கு விஜயம் செய்து நிலைமைகளை கண்டறிந்த வட மாகாண ஆளுநர்

Report Print Suman Suman in சமூகம்

வடமாகாண ஆளுநராக நேற்றைய தினம் கடமைகளைப் பொறுப்பேற்ற வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு இன்று காலை 10 மணிக்கு அவர் சென்றுள்ளார்.

இதன்போது வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கை சம்மந்தமாக அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.