மன்னாரில் கைப்பற்றப்பட்டுள்ள கேரள கஞ்சா தொடர்பில் மூடி மறைக்கும் பொலிஸார்...

Report Print Ashik in சமூகம்

மன்னார் மாவட்டத்தில் கைப்பற்றப்பட்டு வரும் கேரள கஞ்சா தொடர்பில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு தொடர்ச்சியாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அனுமதி மறுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார், வங்காலை கடற்பகுதியில் இன்று அதிகாலை பொதி செய்யப்பட்ட நிலையில் 184.2 கிலோ கிராம் எடை கொண்ட கஞ்சா பொதிகளுடன் நபர் ஒருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

சுமார் ஒரு கோடி 84 இலட்சம் ரூபாய் பெறுமதியான இந்த கேரள கஞ்சா பொதிகளுடன் உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாப்பொதிகளுடன் கைது செய்யப்பட்ட நபர் வங்காலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு சிறிது நேரத்தின் பின் புகைப்படம், வீடியோ எடுக்க அனுமதி வழங்குவதாக பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

எனினும் நீண்ட நேராமாகியும் அனுமதி கிடைக்காக நிலையில் ஊடகவியலாளர்கள் பொறுப்பதிகாரியிடம் வினவியுள்ளனர்.

இதன் போது புகைப்பட எடுக்க அனுமதிக்க முடியாது எனவும் இதனால் தனது விசாரணைக்கு பாதிப்புக்கள் ஏற்படும் எனவும் ஊடகவியலாளர்களை அச்சுரூத்தும் வகையில் பொறுப்பதிகாரி நடந்துக் கொண்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கேரள கஞ்சா மீட்கப்பட்டு வருகின்ற நிலையில் அதிகாரிகளினால் முடி மறைக்கப்படுகின்றது.

எனினும் ஏனைய மாவட்டங்களில் பொலிஸாரினால் கைப்பற்றப்படுகின்ற கஞ்சா உடனுக்குடன் ஊடகங்களினூடாக வெளிக்கொண்டு வரப்படுகின்றது.

குறித்த பொறுப்பதிகாரியின் செயற்பாடு தொடர்பில் ஊடகவியலாளர்கள், பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதோடு, சட்டத்தரணிகளிடம் ஆலோசனைகளையும் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers