சட்டவிரோதமாக கிரவல் மண்களை ஏற்றிச்சென்ற மூவர் கைது!

Report Print Theesan in சமூகம்

வவுனியா - செட்டிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக கிரவல் மண்களை ஏற்றிச்சென்ற மூன்று டிப்பர் வாகனங்களை கைப்பற்றியதுடன் அதன் சாரதிகளையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

செட்டிக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியூடாக சென்ற டிப்பர் வாகனங்களை சோதனைக்குட்படுத்தியதாகவும் கிரவல் மணல் ஏற்றுவதற்கான அனுமதியின்றி கிரவல் மண்களை ஏற்றிச்சென்ற மூன்று டிப்பர்களை கைப்பற்றியதுடன் அதன் சாரதிகளையும் கைது செய்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ் விடயம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.