ஊடக வலையமைப்பின் தலைமைக் காரியாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

Report Print Dias Dias in சமூகம்

தனியார் ஊடக வலையப்பின் தலைமைக் காரியாலயத்திற்கு முன்பாக தற்போது ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள ஊடக வலையமைப்பு ஒன்றான நியூஸ் ஃபெஸ்ட்டின் தலைமைக் காரியாலயத்திற்கு முன்பாகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் தம்மை சிவில் அமைப்பு என அடையாளப்படுத்திக் கொண்டு கறுப்பு நிற ஆடையணிந்தவாறு முகங்களை மறைத்தப்படி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக இந்த எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பத்தில் அறவழி ஆர்ப்பாட்டம் என தெரிவித்து கடிதம் ஒன்றை கையளிக்க முற்பட்டுள்ளனர்.

குறித்த கடிதம் ஏற்றுக்கொள்ளப்படாத சந்தர்ப்பத்தில், அவர்கள் விரல்களை நீட்டி அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலைத்துறையை சார்ந்தவர்களும் திரைப்பட நடிகர்களும் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் குழுவினர் ஏனைய ஊடக நிறுவனங்களுக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.