போலி நாணய தாள்களை விநியோகிக்க முற்பட்ட இளைஞர்கள் கைது

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

யாழ்ப்பாணத்தில் போலி 5000 ரூபாய் நாணயத் தாள்களை விநியோகிக்க முற்பட்ட இரண்டு இளைஞர்களை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ். தென்மராட்சி கைதடியில் இன்று அதிகாலை போலி நாணயத்தாள் விநியோகிக்க முற்பட்ட போதே குறித்த இளைஞர்களை போலிஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதற்கமைய நடவடிக்கைளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேகநபர்களிடம் இருந்து போலி 5000 ரூபாய் நாணயத்தாள்கள் இருப்பதை கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் தொடர்ச்சியாக ஒரு இலட்சம் ரூபாய் போலி நாணயத்தாள்களை 30,000க்கு விற்பனை செய்துள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் 25, 26 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களை குற்றப்புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைத்து விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.