பொலிஸ் காவலரண் சேதமாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டவருக்கு விளக்கமறியல்

Report Print Mubarak in சமூகம்

பொலிஸ் காவலரண் சேதமாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரை இம்மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை, மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில் குறித்த நபரை இன்று ஆஜர்ப்படுத்திய போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மூதூர் பெரியபாலம் பகுதியில் டிப்பர் வாகனத்தில் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து பொலிஸாருக்கு பொதுமக்களுக்குமிடையில் ஏற்பட்ட முறுகலினால் திரிசீடி சந்தியில் இருந்த பொலிஸ் காவலரண் சேதமாக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மற்றொரு நபரான மூதூரைச் சேர்ந்த 27 வயதுடையவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.