96 வயதான தந்தையைக் கொலை செய்த மகன்

Report Print Manju in சமூகம்

சியம்பலாண்டுவ பொலிஸ் பிரிவில் பீல்லேபெத்த பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் பின்பக்கம் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 96 வயதான டி.ஜீ.கொரநேரீஸ் எனும் 5 பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.

குறித்த நபரின் மகனே அவரைக்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் சந்தேக நபருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேக நபர் குடித்துவிட்டு, அவரது மனைவியையும் குழந்தைகளையும் தாக்க முயன்றுள்ளார். இதனையடுத்து அவர்கள் அருகில் உள்ள ஒரு வீட்டிற்குச் சென்று தப்பியதாக பொலிஸாரிடம் சந்தேக நபரின் மனைவி தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவரின் மகனான சந்தேக நபரை (48 வயது) சியம்பலாண்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று மரண பரிசோதனை நடைபெறவுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சியம்பலாந்துவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.