அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை வெளியேறுமாறு கோரிக்கை

Report Print Mohan Mohan in சமூகம்

அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அங்கிருந்து உடனடியாக வெளியேறவேண்டும் என பொதுமக்கள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

அளம்பில் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தை நிலஅளவீடு செய்வதற்காக நிள அளவீட்டு திணைக்கள அதிகாரிகள் இன்று காலை அங்கு சென்று நிலஅளவீடு பணிகளை தொடர்ந்தனர்.

இதன்போது அந்தப்பகுதியில் ஒருங்கிணைந்த பொதுமக்கள் அளம்பில் மாவீரர் துயிலுமில்ல வளாகம் நிலஅளவீடு செய்வதை நிறுத்துமாறு எதிர்ப்பு போராட்டத்தில் குதித்தனர்.

நிலஅளவீடு அளவீட்டு திணைக்கள அதிகாரிகள் நில அளவிடு செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பனர் சாந்தி சிறிஸ்கந்தராசா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.

இதன்போது அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அங்கிருந்து உடனடியாக வெளியேறவேண்டும் நில அளவீடு பணிகளை தடைசெய்யவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சென்ற ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் திகதி மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசஅதிகாரிகளுக்களை முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் சந்தித்த பொதுமக்கள் அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அங்கிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன்போது பல நூற்றுக்கணக்கான மாவீரர் பெற்றோர் உள்ளிட்ட பொதுமக்கள் கையெழுத்திட்ட மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இந்நிலையில் 11 மாதங்களின் பின்னர் இன்று நில அளவீடு திணைக்கள அதிகாரிகள் மாவீரர் துயிலுமில்ல காணிகளை நிலஅளவீடு செய்து இராணுவத்தினருக்கு சொந்தமாக வழங்க முயற்சித்துள்ளதாக சம்பவ இடத்தில் நின்ற பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.