கொங்கிரீட் தூண் திடீரென சரிந்து விழுந்ததில் 16 வயது மாணவன் பலி

Report Print Manju in சமூகம்

அநுராதபுரம் பலாகல- புதுகேஹீன்ன மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 16 வயதான மாணவன் மீது கொங்கிரீட் தூண் விழுந்ததில் மாணவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவன் விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தவேளை புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருந்த விளையாட்டு மண்டபத்தின் கொங்கிரீட் தூண் திடீரென சரிந்து விழுந்ததில் மாணவன் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்களின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பாக கல்கிரியாகம பொலிஸ் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.