செல்ஃபி எடுக்க முயற்சித்த இளைஞனுக்கு நேர்ந்த கதி

Report Print Steephen Steephen in சமூகம்

மாத்தறை கிரிந்த கடற்கரையில் செல்ஃபி எடுக்க முயற்சித்த இளைஞர் ஒருவர் கடல் அலையில் சிக்கி காணாமல் போயுள்ளார்.

மாத்தறை, முலட்டியான பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான இளைஞனே இவ்வாறு அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

கதிர்காமம் யாத்திரை சென்று விட்டு நேற்று மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்த சிலர் கிரிந்த கடற்கரைக்கு சென்றிருந்தனர்.

அவர்களுடன் இருந்த இந்த இளைஞன் கடற்கரையில் செல்ஃபி எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது வந்த அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

கடற்படையின் சுழியோடிகள் அணி, காணாமல் போன இளைஞனின் சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.