பார்க் யூன் கோ சர்வதேச பாடசாலை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் ஆரம்பம்!

Report Print Sumi in சமூகம்

பார்க் யூன் கோ சர்வதேச பாடசாலை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பகுதியில் முதன்முதலாக இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மகா போதி சங்கம் மற்றும் யோசிதா அறக்கட்டளையின் தலைவர் வணக்கத்திற்குரிய பனாஹல உபதிஸ்ஸ தேரர் ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்துள்ளார்.

இந்த பாடசாலை கடந்த வருடம் புரட்டாதி மாதம் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் திறந்து வைத்துள்ளார். இந்தப் பாடசாலைக்குரிய கட்டுமானப் பணிகளை மகா போதி அறக்கட்டளை நிறுவனம் முன்னெடுத்துள்ளது.

பிரதானமாக ஆங்கில மொழி அறிவினை விருத்தி செய்யும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டைப் பிரதேசத்தில் இந்தப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள இப்பாடசாலை யாழ்ப்பாணத்திலும் முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

இப் பாடசாலையில் மாணவர்களை இணைத்தல் மற்றும் ஆரம்பம், கல்வி நடவடிக்கை நேற்று சம்பிரதாய பூர்வமாக மத தலைவர்களின் ஆசியுரையுடன் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட பனாஹல உபதிஸ்ஸ தேரர் கருத்து தெரிவிக்கையில்,

எதிர்காலத்தில் எங்களுக்கு இவ்வாறான சந்தர்ப்பங்கள் கிடைத்தால், மேலும் பாடசாலைகள் அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுப்போம். இந்த நிகழ்வை ஒவ்வொரு வருடமும் நிகழ்த்துவதாக இருக்கின்றோம்.

அந்தவகையில், இந்தப் பாடசாலை இங்கு ஆரம்பித்ததில் இந்தப் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு நன்மை கிடைக்கும். சகவாழ்விற்கு பாரிய ஒரு சாத்தியமாக அமைய நான் நம்புகின்றேன்.

யாழ்ப்பாணத்தில் நகரப் பகுதியில் ஆரம்பித்து அனுசரனை செய்த கொரிய பார்க் யூன் கோ என்பவரின் ஆரம்பிக்க மூலகாரணமாக இருந்துள்ளார்.

இப்பாடசாலை 10 பேருடன் ஆரம்பிக்கப்பட்டது. இன்று 50 பேர் இருக்கின்றார்கள். இந்தப் பாடசாலைக்கு நிதி உதவிய யாழ்ப்பாண மாவட்ட தளபதி தாசன ஹெட்டியாராட்சிக்கு இப்பிரதேச மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

எதிர்காலத்தில் நல்ல பிரியோசனத்தை அடைவார்கள் என நம்புகின்றேன் என்றார்.

இந்நிகழ்வில், யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி தர்சன ஹெட்டியாராச்சி உட்பட மதகுருமார் பாடசாலை நிர்வாகத்தினர், மகா போதி சங்கம் மற்றும் யோசித அறக்கட்டளை நிறுவனத்தினர் உட்பட பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.