யாழ். கனியவளத்துறை அதிகாரியால் பழிவாங்கப்பட்ட நபர்!

Report Print Thileepan Thileepan in சமூகம்

யாழ். கனியவளத்துறை அதிகாரியின் ஊழல் தொடர்பாக கடந்த தினம் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன இதன் காரணமாக குறித்த நபரே செய்தி வெளியிட்டார் எனும் சந்தேகத்தில் அவரின் மணல் களஞ்சியசாலைக்கு குறித்த ஊழல் அதிகாரியால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

பொய்யான பல குற்றச்சாட்டுக்களை அவர் மேல் சுமத்தி அக் களஞ்சியசாலைக்கு இன்றைய தினம் சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நபரை மணல் ஊழல் அதிகாரியுடன் இணைந்து செயற்படும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் சில ஆதரவாளர்கள் தொலைபேசியில் மிரட்டியுள்ளனர்.

அத்தோடு குறித்த ஊழல் அதிகாரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசமான முல்லைத்தீவு உடையார்கட்டு பகுதியில் மணலே இல்லாத போதும் 1500 கியூப் மணல் அள்ளுவதற்கு அனுமதிப்பத்திரம் கொடுத்துள்ளது.

இந்நடவடிக்கை இவரின் ஊழலின் உச்சத்தை காட்டுகிறது எனலாம் மேலும் குறித்த அதிகாரி யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருடன் இணைந்து பல பொய்யான பெயர்களில் அனுமதிப்பத்திரம் தயார் செய்து மணல் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த அதிகாரியின் இச்செயற்பாடு காரணமாக குறித்த ஊழல்வாதிக்கு எதிராக ஜனாதிபதிக்கும், பிரதமர் அலுவலகத்திற்கும் இவரால் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு அளித்துள்ளனர்.