கழிவகற்றல் செயற்பாடுகளில் பாரிய நெருக்கடி: மட்டு முதல்வர் கவலை

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு மாநகரசபை கழிவகற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்வதாக மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்திருந்தார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட அமிர்தகழி ஸ்ரீ சித்திவிநாயகர் மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான அப்பியாசக்கொப்பிகள் வழங்கும் நிகழ்வு தி.சரவணபவன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கழிவகற்ற தொடர்பில் மாணவர்கள் மத்தியில் அறிமுகம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வறிய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை நோக்காக கொண்டு மாநகரசபையினால் அப்பியாசக்கொப்பிகள் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிகழ்வில் மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர் சசிகலா, மாநகரசபையின் சமூக மேம்பாட்டு உத்தியோகத்தர் சந்திரகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட புறநகர் பகுதிகளில் உள்ள 12 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு 1000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அப்பியாசக்கொப்பிகளை வழங்கும் நடவடிக்கைகளை மாநகரசபை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers