கிளிநொச்சி - பெரியபரந்தன் கமக்கார அமைப்பினரின் ஒழுங்கமைப்பினூடாக கிளிநொச்சி கமநல சேவைகள் நிலையத்தினால் கிராம மக்களுக்கான நல்லினப் பழமரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த கிராம மக்களுக்கான நல்லினப் பழமரக்கன்றுகளை பெரியபரந்தன் கமக்கார அமைப்பினர் இன்றைய தினம் காலை வழங்கி வைத்தனர்.
குறித்த கிராம மக்களுக்கான நல்லின பழமரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வில் பெரியபரந்தன் கமக்கார அமைப்பின் தலைவர் சு.யதீஸ்வரன் மற்றும் செயலாளர், அப்பகுதி கிராமசேவையாளர், கமக்கார அமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு மக்களுக்கு வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.