தமிழர் மலை வெடுக்குநாறியில் ஆய்வில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்!

Report Print S.P. Thas S.P. Thas in சமூகம்

வெடுக்குநாறிமலையை ஆய்வு செய்வதற்காக கொழும்பிலிருந்து வருகை தந்திருக்கும் தொல்லியல் நிபுணர்கள், வவுனியா மாவட்ட தொல்லியல் திணைக்களத்தினர், நெடுங்கேணி காவல்துறையினர், இராணுவத்தினர் போன்றோர் ஈடுபட்டுள்ளனர்.

இன்றைய தினம் வெடுக்குநாறிமலையை ஆய்வு செய்யும் நோக்கில் கொழும்பிலிருந்து வருகை தந்திருக்கும் தொல்லியல் நிபுணர்கள், வவுனியா மாவட்ட தொல்லியல் திணைக்களத்தினர், நெடுங்கேணி காவல்துறையினர், இராணுவத்தினர் போன்றோர் வருகை தந்து தற்போது ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த ஆய்வு செய்வதனை இடைநிறுத்த சென்ற ஆலய நிர்வாகத்தினருக்கும் தொல்லியல் திணைக்களத்தினருக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

“நீண்டகாலமாக வெடுக்குநாறிமலையின் பிரச்சினை தொடர்கின்றது. இதனால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாமல் பிரதேச மக்கள் இருக்கின்றார்கள் என வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஜனாதிபதி செயலகத்திற்கு தெரியப்படுத்தியிருக்கின்றார். இதனால் தான் இந்த ஆய்வு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஜனாதிபதி செயலகம் தொல்லியல் திணைக்களத்தினரை உடனடியாக ஆய்வினை மேற்கொண்டு தரவுகளை தருமாறு கேட்டுக்கொண்டுள்ளதனால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக” அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது வெடுக்குநாறிமலையில் காணப்படும் கல்வெட்டின் எழுத்துக்களை பிரதி எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers