வீடற்றோருக்கு வீடுகள் அமைப்பதற்கான காணி ஒதுக்கீடு

Report Print Nesan Nesan in சமூகம்

அம்பாறை - நாவிதன்வெளி பகுதி பிரதேச செயலகத்திற்குட்பட்ட மத்திய முகாம் பிரதேசத்தில் வீட்டு வசதியற்ற குடும்பங்களுக்கு தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் அனுசரணையின் கீழ் காணி துப்பரவு பணி இடம்பெற்றது.

நாவிதன்வெளி பிரதேச சபை மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் மேற்பார்வையில் மானிய அடிப்படையில் வீடுகள் வழங்கும் திட்டத்திற்கு குறித்த பணி இன்று மாலை இடம்பெற்றது.

ஸ்தலத்திற்கு விரைந்த முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளருமாகிய தவராசா கலையரசன் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ். ரங்கநாதனும் நேரில் சென்று பார்வையிட்டனர்.

வீட்டு வசதியற்ற, வலது குறைந்த, பெண் பிள்ளைகளை அதிகம் கொண்ட குடும்பங்களை தெரிவு செய்து தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் தலா ஐந்து இலட்சமும் மக்கள் பங்களிப்பு மூன்று இலட்சமும் கொண்டு எட்டு இலட்சம் பெறுமதியான வீடுகள் அமைப்பதற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.

இதன் முதற்கட்டமாக இருபத்தைந்து பயனாளிகளுக்கு வீடுகள் வழங்குவதற்கான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந் நிகழ்விற்கு நாவிதன்வெளி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.லதா, நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர்கள் சி.குணரெட்னம், அமரதாஸ் ஆனந்த, மு.நிறோஜன், ஆலய நிர்வாகத்தினர், பிரதேச வாழ் இளையோர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.