மன்னார் பாடசாலைகளில் சிறப்பாக இடம்பெற்ற வீதி ஓட்டப்போட்டி

Report Print Ashik in சமூகம்

மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் 2019ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியின் வீதி ஓட்டப்போட்டி இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு பாடசாலைக்கு முன்பாக ஆரம்பமாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

பாடசாலைக்கு முன் ஆரம்பமான குறித்த போட்டி பிரதான வீதியூடாக சென்று மன்னார் வைத்தியசாலை வீதியை சென்றடைந்து பள்ளிமுனை வீதியூடாக சென்று மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்து மீண்டும் பாடசாலையை சென்றடைந்துள்ளது.

இதன்போது குறித்த போட்டியில் 1 ஆம் இடத்தினை தாஜ் இல்லத்தைச் சேர்ந்த எம்.எம்.எம்.முஜாகிர் மற்றும் 2 ஆம், 3 ஆம் இடங்களை சம்ஸ் இல்லத்தைச் சேர்ந்த வீரர்களான எம்.எல்.எம்.சல்மான் பாரீஸ் மற்றும் எம்.கே.எம்.வசீம் ஆகியோர் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதே வேளை 2019 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியின் முதல் நிகழ்வான வீதி ஓட்டப்போட்டியானது இன்றைய தினம் மன்னார் சித்திவிநாயகர் இந்தக்கல்லூரி மற்றும் மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி ஆகியவற்றிலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.