வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் கோழிக்கழிவுகள் வீசப்பட்டுள்ளதாக விசனம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா பழைய பேருந்து நிலைய பகுதியில் வீசப்பட்டுள்ள குப்பைகளில் கோழிக்கழிவுகள் வீசப்பட்டிருப்பதால் துர்நாற்றம் வீசுவதாக வர்த்தகர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த பேருந்து நிலையப் பகுதிகளிலுள்ள வியாபாரிகள் இன்று அதிகாலை வர்த்தக நிலையங்களுக்கு வருகை தந்த வேளையிலேயே இவ்வாறு கோழிக்கழிவு குப்பைகள் வீசப்பட்டுள்ளதை அவதானித்துள்ளனர்.

இதனால் பல்வேறு தேவைகளுக்காக இப்பகுதிக்கு வருகை தரும் பொது மக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரியவருகிறது.