அப்துல்லா மஹ்ரூபிற்கு பிரதியமைச்சு பதவி! கொண்டாட்டங்களில் ஈடுபட்ட ஆதரவாளர்கள்

Report Print Gokulan Gokulan in சமூகம்

நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூபிற்கு துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதியமைச்சு பதவி வழங்கப்பட்டதையடுத்து கிண்ணியாவில் உள்ள அவரின் ஆதரவாளர்கள் வெடி கொளுத்தி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதியமைச்சராக இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில், கிண்ணியா புஹாரியடி சந்தி, அல் அக்ஸா சந்தி உள்ளிட்ட இடங்களில் தங்களது மகிழ்ச்சியை ஆதரவாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.