வழமை போல கிண்ணியாவில் நடவடிக்கைகள்

Report Print Gokulan Gokulan in சமூகம்

திருகோணமலையின் கிண்ணியா பிரதேசத்தில் உள்ள கடைகள் திறக்கப்பட்டு வழமை போன்று செயற்பாடுகள் இடம்பெறுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக கிழக்கில் பூரண ஹர்த்தாலை மேற்கொள்ள நேற்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் கிண்ணியா பகுதியில் ஹர்த்தால் மேற்கொள்ளப்படவில்லை எனவும், மக்களின் நடமாட்டமும் வியாபார நடவடிக்கைகளும் வழமை போன்றே காணப்படுவதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

அத்துடன் அரச நிறுவனங்கள், தனியார் வங்கிகள், பொது நூலகங்கள் என அனைத்தும் வழமை போன்றே இயங்குவதாகவும் தெரியவருகிறது.

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், மூதூர்,புல்மோட்டை மற்றும் சேருவில போன்ற பகுதிகளில் மக்களின் அன்றாட போக்குவரத்து செயற்பாடுகள் மற்றும் பாடசாலைகள், அரச திணைக்களங்கள் அனைத்தும் இன்றைய தினம் நடைபெற்றதை காணக்கூடியதாகவுள்ளது.