இலங்கையில் நள்ளிரவில் ஒன்றுகூடிய பெருமளவு வெளிநாட்டு பெண்கள்! சுற்றிவளைத்த அதிரடி படையினர்

Report Print Vethu Vethu in சமூகம்

அம்பலதொட்டை, உஸ்ஸன்கொட கடற்கரையில் பெருந்தொகையிலான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நிறைந்து காணப்படுவதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 3000 சுற்றலா பயணிகளின் பங்களிப்புடன் உஸ்ஸன்கொட கடற்கரை மற்றும் சுற்றியுள்ள காட்டுப் பகுதிகளில் சுற்றுலா முகாம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றுலா முகாம் 10 நாட்களுக்கு நடைபெறும். சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும் சுற்றுலா முகாம்களை ஏற்பாடு செய்யும் வெளிநாட்டு தனியார் நிறுவனங்களினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முகாமிற்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கான வசதி மற்றும் போக்குவரத்து சேவைகளுக்காக அந்த பிரதேசத்தில் பல வீடுகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள் சுற்றுலா பயணிகளின் பயண வசதிகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முகாம் எல்லைக்குள் இலங்கையர்கள் எருவரும் நுழைவதற்கு அனுமதி வழங்கப்படாது. தனிப்பட்ட பாதுகாப்பு சேவை ஒன்று முகாமை சுற்றி பாதுகாப்பு வழங்கியுள்ளது.

எனினும் இம்முறையில் அந்த பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

காட்டுப் பகுதி மற்றும் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சத்தமாக இசைக்கருவிகளை இசைப்பதுடன். மதுபானம் மற்றும் ஆபாச செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரவு நேரங்களிலும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் அந்தப் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உஸ்ஸன்கொட கடற்கரையில் இவ்வாறான பாரிய அளவு சுற்றுலா பயணிகளின் செயற்பாடுகள் அந்த பகுதி மக்களுக்கு சற்று சிக்கலாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எனினும் இந்த சுற்றுலா முகாம் காரணமாக இலங்கைக்கு பாரியளவு முதலீடு கிடைப்பதுடன் அந்த பகுதி மக்களுக்கு வருமானம் கிடைப்பதாக தெரிவிக்கப்படுகிறது.