அனுமதி பெற்றே பொது இடங்களில் சிலை அமைக்க நடவடிக்கை....

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் எம். ஜி.ஆர் நற்பணி மன்றத்தினால் எம். ஜி. ஆர். சிலை அமைப்பதற்கு தர்மலிங்கம் வீதியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன் வவுனியா நகரில் பொதுஇடங்களில் சினிமா நடிகர்களுக்கு சிலை அமைப்பதற்கு நகர சபையின் உறுப்பினர்களின் அனுமதி பெற்றே பொது இடங்களில் சிலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு நகர உப பிதா சு.குமாரசாமியை தெரிவித்துள்ளார்.

இது குறித்து நகரசபை நகர உப பிதாவிடம் இன்று தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த வாரம் வவுனியா நகரசபைக்கு எம். ஜி. ஆர் நற்பணி மன்றத்தினால் கடிதம் ஒன்று வழங்கப்பட்டுள்ளதுடன் அதில் நகரின் முக்கிய பகுதியான தர்மலிங்கம் வீதியிலுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையினரின் பகுதி முச்சந்தி ஒன்றில் எம். ஜி. ஆரின் சிலை அமைப்பதற்கு அனுமதிக்குமாறு கோரிக்கை கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அப்பகுதியில் சிலை அமைப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில் அதனை தடுத்து நிறுத்தியதுடன் நகரசபையின் அனுமதி பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த நற்பணி மன்றம் பதிவு செய்யப்படவில்லை எனவே பதிவு செய்யப்படாத ஒரு மன்றத்தின் கோரிக்கையினை நகரசபையினால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது. பள்ளி வாசலுக்கு அருகில் அமைக்கப்படும் இச்சிலைக்கு பெருமளவானர்கள் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நகரசபையின் அனுமதிக்கடிதம் கிடைத்துள்ளது. எனினும், எமது சபையில் அவ்விடம் ஆராயப்பட்ட பின்னரே இதற்கு பதில் வழங்க முடியும் இதை விடுத்து அப்பகுதியில் அனுமதியற்ற விதத்தில் சிலை அமைப்பதற்கு அனுமதிக்க முடியாது.

அத்துடன் வவுனியா பொது இடங்களில் நடிகர்களுக்கு சிலை அமைப்பதற்கு சபையின் உறுப்பினர்களின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறான இடங்களில் தமிழ் அறிஞர்கள், புலவர்களின் சிலையை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளமுடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இவ்வாறு எம். ஜி. ஆரின் சிலை அமைப்பதாக செய்திகள் பரவியதும் நடிகர் விஜயின் ரசிகர்களும் தமது தலைவரின் சிலையை அமைப்பதற்குரிய நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.