வீதியினை மறித்து டயர் எரித்த குற்றச்சாட்டில் இருவர் கைது

Report Print Rusath in சமூகம்

பொதுப் போக்குவரத்தை தடை செய்யும் வகையில் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் நாவற்குடா பகுதியில் டயர் எரித்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் இன்று காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நாவற்குடா பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன், பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கிணங்க இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.