அமைச்சர் மனோ கணேசனால் பாடசாலை மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

அமைச்சர் மனோ கணேசனின் வழிகாட்டலில், மாநகரசபை உறுப்பினர் ஜீ. விஷ்ணுகாந்தினால் ஒதுக்கப்பட்ட நிதியில் பாடசாலை மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கொழும்பில் உள்ள குமார உதய தமிழ் மகாவித்தியாலயத்தில் இன்று மனோ கணேசனின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன் போது 1600 பாடப் புத்தகங்கள், புத்தகப்பைகள், பாதணிகளுக்கான வவுச்சர்கள் மற்றும் சீருடைகள் என்பன பாடசாலை மாணவர்களுக்கு அமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் விஷ்ணுகாந் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.